Saturday, February 20, 2016

குரு சொல்லித்தராத பாடம் !


ஒருவன் சீடனாக இருக்கத் தயாராகும் அதே தருணத்தில் அவனுக்கான குருவும் தோன்றிவிடுகிறார்’ என்கிறது பிரம்மஞான தத்துவம். அதனை நீங்கள் எல்லோரும் றிந்திருப்பீர்கள்இள வயதில் ஆர்னோல்டு சுவார்செனேகரிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்.  உங்களுக்கு முன்மாதிரியா நீங்கள் நினைப்பது  யாரைஎன்று. அப்பொழுது சற்றும் தாமதியாமல் அவர் வாயிலிருந்து உதிர்ந்த பெயர் ’முகம்மது அலி’.
உங்கள் பயிற்சிமுறை எப்படிப்பட்டது! தினமும் எத்தனை தண்டால்பஸ்கி எடுப்பீர்கள் என்று தன்னிடம் கேட்கிறவர்களுக்கு அலி சொல்லும் பதில் அசாதாரமானது. பொதுவா நான் எடுக்கும் தண்டாலையோபஸ்கியையோ நான் க்கு வெச்சுக்கிறதில்லஇந்தப் பயிற்சியைச் செய்துகொண்டிருக்கும்போது எனக்கு எப்போது வலியெடுக்க ஆரம்பிக்கிறதோ
ந்நொடியிலிருந்துதான் 1,2,3 என்று எண்ண ஆரம்பிப்பேன். அதற்ப் பிறகு உயிர்போகிற மாதிரி எனக்குவலி எடுக்கிறவரை ன் யிற்சியானது தொடரும்” என்ற அலியின் வாய்வார்த்தைகள்தான்ஆனாப்பட்ட ஆர்னோல்டையே தன் ஆர்ம்ஸ்ஸை ஏற்றச் சொல்லித் தூண்டியது

இறுதிச்சுற்று படத்தின் நாயகி - சென்னையின் கடலோரக்குப்பத்தில் மீன் விற்றுக்கொண்டிருந்த மதி என்ற அந்த இளம்பெண், தன் வாழ்க்கை குத்துச் சண்டையை மையமாகக் கொண்டதாகத்தான் அமையவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னாலிருந்தே தன்னுடைய மானசீக குருவாக முகமதுஅலியை ஏற்றுக் கொண்டு விடுகிறாள்..

குரு சிஷ்ய உறவு குறித்து இதிகாசங்களிலும்புராணங்களிலுமிருந்து பல மேற்கோள்கள் காட்டலாம்.குருகுலவாசமுறையில் பயிற்சி பெறுபவர்கள் எல்லாருமே சரிசமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதுதான் தர்மம். ஆனால் போர் சூட்சமங்களைக் கற்றுக்கொள்ளும் அனைவரும் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இதிலே மறைபொருளாக ஊடாடிக்கொண்டிருக்கும்தனால்தான் ங்கே ஏகலைவர்களிடம் கட்டைவிரல் காணிக்கையாகக் கேட்கப்படும் அவலங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன..

இறுதிச்சுற்று திரைப் படத்தின் கதாநாயகியின் அக்காவான லக்ஸ் என்ற லஷ்மியும் இதேபோன்றதொரு நிர்பந்தத்திற்காளாகிறாள்.எப்படியாவது அந்த ஒருமுறை மட்டும் சமாளித்துவிட்டால் போதும் தேசிய அளவிலான குத்துச் சண்டைபோட்டிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு தனக்குக் கிடைத்து
விடும்
அதன் பிறகு வெற்றி தோல்வி என்பது எல்லாம் ஒரு பொருட்டல்லஅதைப் பயன்படுத்தி அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதில்  முன் உரிமைபெற்றுவிடலாம் என்கிற நப்பாசை லஷ்மிக்குகுத்துச்
சண்டைச்
 சங்கத்தின் தலைவரான தேவ் லக்ஷ்மியின் இந்தத்  தேவையை அறிந்து தேசிய அளவில் தேர்வு செய்யப்படுவதற்குகைமாறாக வேறு ஒரு சேவையை  அவளிடமிருந்து எதிர்பார்க்கிறார். குடும்பச் சூழல் கருதி அவர் கேட்டவிலையைக் கொடுக்கவும் துணிகிறாள் அவள்இந்தச் சூழலில் நம்பிக்கையோடு தன் தங்கையுடன்அவள் பயிற்சி செய்துகொண்டிருக்கையில் புதிதாக வந்த பயிற்சியாளர் பிரபு இவர்களைக் கவனிக்கிறார்.தேவின் சூழ்ச்சியால் பரமபதத்தில் பாம்பால் கடிபட்டு கீழே சரிவதுபோல் தன் அந்தஸ்தை இழந்த அவர் மீண்டும் ஒரு தரமான குத்துச்சண்டை வீராங்கனைக்காக சென்னையின் குப்பங்களில் வலைவீசித் தேடுகிறார்.

தீப்பந்தத்தைத் தலைகீழாகப் பிடித்தாலும் தீ மேல் நோக்கி எறிவதைத் தடுக்கமுடியாது பதுதானே உறைக்கும் உண்மை.என்னதான் லக்ஷ்மி முறையான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் தன்னைப்போல்   இயல்பாகவே அதன் நுணுக்கங்கள் கைவரப்பெற்ற மதிதான் சிறந்த குத்துச்சண்டை 
வீராங்கனையாக வரக்கூடும் என்பதைத் தன் முதல் பார்வையிலேயே பிரபு இனங்கண்டுவிடுகிறார். ஆனால்  மதிக்கோ முறையாகக் குத்துச் சண்டைக்கான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்ற உந்துதல் எதுவும் இல்லைஅதனால் அவள் பயிற்சிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில்  அவளுக்கு தினமும் 500 ரூபாயைத் தான் சன்மானமாகத் தருவதாக வாக்களிக்கிறார்பயிற்சியாளர் பிரபு
சச்சின் டெண்டுல்கர் தன் சுயசரிதையில் தன் ஆசான் அச்சரேக்கரைப் பற்றிக் குறிப்பிடுகிறார் இப்படி: 
ஒவ்வொரு நாள் வலைப்பயிற்சியின்போதும் ஸ்டம்ப் குச்சியின்மேல் 1 ரூபாய் நாணயம் ஒன்றைவைப்பார் என் குருநாதர்அன்று முழுவதும் அந்தக் குச்சி கீழே விழாதபடிக்கு அதாவது நீ ஆட்டமிழக்காமல் இருந்தால் அந்த நாணயத்தை அதற்கான வெகுமதியாக நீ எடுத்துச் செல்லலாம் என்று என் திறமைக்கும் பொறுமைக்கும் சவால் விடுவார்அந்த வயதில் ஒரு ரூபாய்க்கு என்னென்ன தின்பண்டம் வாங்கலாம் என்பதில்தான் என் கவனமெல்லாம் இருந்தது என்பது உண்மைதான்.ஆனாலும் அவரது சவாலை ஏற்றுக்கொண்டு அதில் வெற்றி பெற்றதும்... சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த அந்த ஒற்றை ரூபாய் நாணயங்களும்தான் உலக அரங்கில் என் மதிப்பு உயரக் காரணமாக இருந்தன என்பதை இப்போது நான் உணர்கிறேன்.

மதியும்அப்படிப்பட்டதொரு மனநிலையில்தான் ஆரம்பத்தில் பயிற்சிக்குவர சம்மதிக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய அந்தத் திறமையானதுகுத்துச் சண்டையில் தனக்கிருக்கும்  ஆற்றல் ன்றால்தான் தனக்கு விமோசனம் கிடைக்கும் என்பதை உணர்ந்துகொண்டு தனக்கு ஏற்படும் எல்லாவித இன்னல்களையும் சகித்துக்கொண்டு முன்னேறிவரும் தன் அக்காவிற்கே வினையாக முடியப்போகிறது என்பதை அறிந்து கொள்கிறாள். அதற்குப் பிறகு தன்போக்கை மாற்றிக் கொள்ள முற்படுகிறாள். அதன் காரணமாகத் தனக்கு வாய்த்த சர்வதேச வாய்ப்பைக்கூடத் துச்சமாக எண்ணித் தூக்கி எறிய அவள் எத்தனிக்கும்போதுதான் குருக்ஷேத்திர யுத்தகளத்தில் உறவுகளுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டிய தேவை இல்லை என்று அவளுக்கு உபதேசிக்கிறார் அவளது சாரதியும் பயிற்சியாளருமான பிரபுதெய்வத்திற்கு அடுத்தபடியாகத் தாய்தந்தையரைக் காட்டிலும் ஓர் உன்னதமான நிலையில் வைக்கப்பட்டு குருமார்கள் இதனால்தான் போற்றப்படுகிறார்கள். அவர்களுக்குத் தன் மாணவன் என் குறுகியவட்டத்தைத் தாண்டி விசாலமான பார்வை இருக்கும். னது மாணவனது வெற்றியைப் பார்த்து இன்னும் ர் 1000 பேர் அந்தச் சமூகத்திலிருந்து கிளர்ந்தெழுந்து வருவதற்கு அது தளம் அமைத்துக்கொடுக்கும் ன்ற தொலைநோக்கு சிந்தனை அவர்கள் மனதில் இருக்கும்தை நுட்பமாகப்புரியவைத்து மதியை மீண்டும் அவளது இலட்சியப்
பாதை
யில் பயணத்தைத் தொடர்வதற்காக அவளுக்கான வழியையும் சீரமைத்துத் தருகிறார் பிரபு.
இந்தக் கட்டம்வரையிலான கதையின் போக்கு இந்திய சினிமாவில் இதுவரை தடகள வீரர்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட வெற்றிப்படங்களான ‘பாக் மில்கா பாக்’,மேரி கோம்’ போன்ற ஜனரஞ்சகப் படங்களின் வழியில்தான் பயணிக்கிறது.
 இறுதிச்சுற்று திரைப்படம் துளசி ஏகானந்தம் என்ற தமிழ்க் குத்துச்சண்டை வீராங்கனையின் வாழ்வின் உண்மைச் சம்பவங்களின் தழுவல்தான். Light Fly,FlyHigh என்ற ஆவணப்படத்தில் துளசியாக அவரே நடித்து2013 வாக்கில் நார்வேயில் அந்தப் படம் வெளியாகி பல சர்வதேச விருதுகளைக் குவித்துள்ளதுபொதுவாக உண்மைக்கதைகளைப்  படமாக்கும்பொழுது  சிஷ்யன் குருவை மிஞ்சியவனாக வளர்ந்து எப்படிப் பதக்கம் மேல் பதக்கம் வென்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கிறான் என்ற தொனியில் படம் பயணித்து சுபமானதொரு முடிவை எட்டும்ஆனால் இறுதிச் சுற்று கதையின் சூத்திரதாரியான இயக்குனர் சுதா(மணிரத்னத்தின்சிஷ்யை),பிரபு  என்ற புனைவுக் கதாபாத்திரத்தின் மூலம் எப்படி ஒரு குரு தன் ஒரு சிறு கண்ணசைவால் ஒரு குத்துச் சண்டைப்போட்டியின் இறுதிச் சுற்றின் கடைசி சில நொடிகளில்கூட தன் சீடனை தோல்வியின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கமுடியும் என்ற மகத்தான உண்மையைப் பறைசாற்றும் வகையில் திரைக்கதையை வடிவமைத்
திருப்பதுதான்
 நகைமுரண்
படம் வெளியாகி த்தாழ ஒரு மாதமான நிலையில் கராத்தேநீச்சல்உடற்பயிற்சிக் கூடங்களில் சேர்வதற்கு இணையாகக் குத்துச் சண்டை பயிற்சி பெற அதிக அளவில்குறிப்பாகபெண்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர் என்கின்றன செய்திகள்வஞ்சமும்சூழ்ச்சியும் புரையோடிக்கிடக்கும் இந்தியக் குத்துச்சண்டைத் துறையில் என்றாவது ஒரு நாள்  உலக அரங்கில் சாதித்துக் காட்டுவேன்  என்ற வைராக்கியத்துடன் தன்னந்தனியாகப் போராடிக்கொண்டிருக்கும் துளசியின் அடியொற்றி குத்துச் சண்டைப் பயிற்சியில் சேர முன்வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றிக்கான சாட்சி. அப்படியானால் குத்துச் சண்டைக்கோதடகளவிளையாட்டுகளுக்கோ சம்பந்தமே இல்லாதவர்கள் இந்தப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து விடலாமாஎன்றால்அப்படிப்பட்டதொரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது.வாழ்க்கையில் தனக்கென்று ஒரு தனி இலக்கை வகுத்துக்கொண்டு இன்று மென்பொருள் வல்லுனர்மருத்துவர் என இன்னபிற துறைகளில் விரவிக்கிடக்கும் நாம்நாம் அதிகமதிப்பெண் பெறக் காரணமாக இருந்த கணித ஆசிரியரைஅறிவியல் போதித்தவரை ஏன் ஒரு சில பேர் தமிழ் ஆசானைக்கூட இன்றுவரை நன்றியுடன் பல தருணங்களில் நினைவுகூர்கிறோம்அதுபோல இந்தப்படம்
ஒருவகையில் 
வியர்வையின் ருசியை முதல் முதலில் நமக்கு அறிமுகப்
படுத்திய 
உடற்கல்வி ஆசிரியரை நெகிழ்வோடு நினைத்துப்பார்க்கவைக்கிறது.

உங்கள் வீட்டின் நிலவறையில் இருக்கும் கண்ணாடிப்பெட்டியில் இன்றைக்குத் தோரணையாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் பதக்கங்களையும், பரிசுக்கோப்பைகளையும் உங்களது பதின்ம வயதுகளில் நீங்கள் அனாயாசமாகத் தட்டிக்கொண்டு வந்தபோது நான் சாதிக்காததை இவனைச் சாதிக்கவத்திருக்கிறேன் என்ற பூரிப்புடன் கைதட்டியபடி உங்கள் வெற்றியை இரசித்துக்கொண்டிருந்த பி.டி வாத்தியார்கள்தான் இந்தப்படத்தை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது உங்கள்கண்முன் நிழலாடுவார்கள்உங்கள் விடுமுறையைக்கழிப்பதற்காக நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லும்பொழுது 
உங்கள் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தைச் சற்று எட்டிப்பாருங்கள்அங்கே என்னால் இன்னொரு துளசியை, மில்கா சிங்கை உருவாக்க முடியும்  உருவாக்கிக் காட்டவேன் என்  கனவுடன்வைராக்கியத்துடன் அந்தப் புழுதிக் காட்டில்கொளுத்தும் வெய்யிலில் நா வறளக் கத்தியபடி தன் மாணவனின் கூடவே ஓட்டமும் நடையுமாய் மல்லுக்கட்டிக்கொண்டு திரியும், ஒரு உன்னத லட்சியத்துடன் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த மனிதரை உங்களால் சுலபமாக அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும்ஆனால் அவர் உங்களை மறந்து போயிருக்கக் கூடும். அதனால் அவரிடம் சென்று அறிமுகம் செய்துகொள்ள முயற்சியுங்கள்உங்கள் பெயர் என்னஎந்த வருடம் அந்தப் பள்ளியில் படித்தீர்கள்எத்தனை தூரம் குண்டு வீசினீர்கள்எவ்வளவு உயரம் தாவினீர்கள் போன்ற விவரங்களை வேண்டுமானால் அவர் இப்போது மறந்திருக்கலாம்ஆனால் நீங்கள் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் அன்றைக்கு இருந்த அதே அதிகார தோரணை சிறிதும் மாறாதவராக உங்கள் வயிற்றில் செல்லமாக ஒரு குத்துக் குத்தி,“என்னடா இது தொப்பை 30 வயசுல! எக்சர்ஸைஸ் எல்லாம் பன்றதில்லையா படவாராஸ்கல்” என்று உரிமையோடு கண்டிக்காமல் இருக்கமாட்டார்.