Skip to main content

Posts

Showing posts from May, 2020

கலியுகத்துப் பரணி

            ``மேடம் கார்ப்பரேஷன் ஆப்பீஸ்லேர்ந்து வர்றோம்! கெனடாலேர்ந்து வந்த ஃபேமிலி சிதம்பரம்- சிவகாமி இந்த வீடுதானே.’’ ``உங்க வீட்ல யாருக்காச்சும் சளி, இருமல் இல்ல காய்ச்சல் இருக்கா!’’ ``எல்லாம் டெஸ்டும் எடுத்துட்டாங்களே. மறுபடியும் வரச்சொல்லட்டுமா?” “இது ரொடீன் என்குயரிதான். இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படி யாராச்சும் வருவாங்க. அதுக்கப்புறம் வெளியில ஒட்டிருக்க குவாரண்டைன் ஸ்டிக்கர எடுத்துடுவாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுங்க மேடம். ப்ளீஸ்!” ”சரி வரச்சொல்றேன்!” ”உங்க பேர் மேடம்?” “காவேரி.சிதம்பரத்தோட அம்மா. நானும் என் வீட்டுக்காரரும்தான் இங்க குடியிருக்கோம். அவருக்கு ஒடம்புக்கு சரியில்லன்னுதான் புள்ள…பேரப்பசங்கள்லாம் பார்க்க வந்தாங்க….இப்ப அவர் மட்டும் ஹாஸ்பத்ரில தனியா இருக்கார்.” “ஒன்னும் பயம் வேண்டாம் மேடம். அங்க இருக்கவங்க நல்லாப் பாத்துப்பாங்க!” “அது சரி!. சிதம்பரம்-சிவகாமி, பிள்ளைங்களா எல்லாரும் செத்த வாங்க இங்க” “யாரும்மா! கார்ப்பரேஷனா? மேடம் உங்க ஆஃபிஸர் சொன்ன மாதிரி நாங்களே ஐசொலேஷன்லதான் இருக்கோம். நானும் என் வைஃபும் அந்த