Skip to main content

Posts

Showing posts from July, 2024

எண் பெயர் #கட்டியங்காரன் உருவான கதை

  எண் பெயர் #கட்டியங்காரன் புத்தக வெளியீடு பதிப்புத் தொழிலுக்கு வரும்வரை என்னுடைய வாசிப்பு அதிகபட்சமாக ஆங்கிலத்தில்தான் இருந்தது. மைலாப்பூரில் பிறந்து வளர்ந்ததாலோ   என்னவோ கமலஹாசன் , மணிரத்னம் , சுஜாதா ஆகிய மூவரின் தீவிர ரசிக னாக நான் இருந்த காலகட்டம் அது . இன்ஃபோசிஸ் வலைப்பூக்களில் எழுதும்போதுதான் வெவ்வேறு ஊர்கள் , வாசிப்புப் பின்புலம் , சினிமா \ அரசியல் பார்வை உள்ளவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது . மதுரையிலிருந்து வந்த அவநி அரவிந்தனின் நட்பு அங்குதான் தொடங்கியது .   அவனுடைய சிறுகதைத் தொகுப்பை நிச்சயம் ஒரு நாள் வெளியிடுவேன் . கல்லூரி நண்பர்கள் கார்த்திக் , ஸ்ரீநிவாஸ் , நான் ஆகிய மூவ ரும் சேர்ந்து நண்பன் என்ற பெயரில் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பை பாலு மஹேந்திராவின் மாணவர்   பாலா படித்துவிட்டுப் பாராட்டினார். அப்பாவை ஒரு நாள் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார். டிசம்பர் 2013 தலைமுறைகள் வெளியானது. அவரைச் சந்திக்கும் முன்னால் இன்னும் எங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் , ஒரு புத்தகமாவது பெயர் சொல்லும் அளவிற்கு எழுதிவிட வேண்டும் என்று எங்களுக்குத் தோன...