"அம்மா
இந்த லீவுக்கு நம்ம ஊருக்கு போறோம் தானே? அப்பா டிக்கெட் புக் செஞ்சுட்டாங்களா.."
"ம்..உங்க தாத்தா ரயில்வேஸ் மினிஸ்டரா இருக்காரு...நீ நெனச்சப்போ எல்லாம் டிக்கெட் குடுக்க...முதல்ல தலைய ஆட்டாம உக்காரு.. எண்ணெயை நல்லா பதம் போடனும்...(சற்று நேரம் கழித்து எண்ணெயை தேய்த்தபடியே)... இப்போ லீவு நேரம்...1 வாரம்..10 நாள் முன்னாடியே ரிசர்வ் பண்ணணும்"
"ஆமா நம்ம என்னமோ அப்படியே SWISS,PARIS-ன்னு போற மாதிரி....இங்க இருக்கிற மதுரைக்குப் போக இந்த அளம்பல்"
தீபா மண்டையில் நறுக்குன்னு ஒரு குட்டு விழுந்துது....
"ஆஆ....என்று ஓலமிட்டபடி சரட்டென்று திரும்பினாள் தீபா
ஏன்...எதுக்கு என்று அவளுக்கு விளங்கும் முன்
"இந்த கேள்வி எல்லாம் என்கிட்ட வக்கணையா கேளு...... உங்க அப்பா இருக்கும்போது வாயே தொறக்காத......."
"லீவு விட்டா வீட்டுல ஒரு வேலை செஞ்சோமா கொடுத்தத திண்ணோமான்னு இல்லாம ஆயிரத்தெட்டு நோனாசி..... உன்ன எல்லாம் கொண்டு போய் ஊருல உங்க அத்தை கிட்ட விடனும். பெண்டு-நிமிர்ந்திடும்....... இங்க எல்லாம் கேட்ட உடனே கிடைக்குதில்ல அதான்..."
"அம்மா நீ உன் FM-ஐ நிறுத்துறியா..... நான் என்ன கேட்டேன் நீ என்ன சொல்ற...."
"சரி சரி...... இந்த டீ-ய கொண்டு போய் தொரை கிட்ட குடு..... இன்னொரு தடவை எல்லாம் சுட வைக்க முடியாது..... வாரம் ஃபுல்லா நானும் வேலைக்கு போறேன்னு ஒரு பைய தூக்கிட்டு போக வேண்டியது...... லீவு நாளுன்னா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்....."
அப்பாடா புயல் திசைமாறி வீச ஆரம்பிசுடுச்சு....தினேஷா செத்தடா நீ...என்று நினைத்தபடி....சமையல் அறையிலிருந்து..அண்ணன் அறை பக்கம் சென்றாள் தீபா..
தூங்குறவன எழுப்ப முடியும் ஆனா தூங்குறமாதிரி நடிக்கிறவன எழுப்பவே முடியாது...அப்படிப்பட்ட ஒரு ஜென்மம் தான் இது...இதுவரைக்கும் நடந்த உறையாடலை கேட்டும் கேட்காமல்...கண்ணை மூடி படுத்திருந்தான் தினேஷ்...
"டேய் அண்ணா எழுந்திரு..இன்னிக்காச்சும் பல்ல வெளக்கிட்டு டீ குடி.."
என்று தீபா சொல்ல..சோம்பல் முறித்தபடியே எழுந்து..இன்னைக்கு பேப்பர் வந்துடுச்சா என்று கேட்டான் தினேஷ்...
"ம்..சூடு ஆறி போச்சாம்...அம்மா அடுப்படியில சுடவச்சுக்கிட்டு இருக்க்காங்க போய் வாங்கிக்கோ"-ன்னு சலிச்சுக்கிட்டா தங்கைக்காரி.
அடுப்படிக்கு சென்ற பையன் அன்றைய newspaper மாவு சலிக்க பயன்படுத்த பட்டிருப்பதை பார்த்தான்..
""GOOD MORNING...MUMMY..TODAY'S NEWSPAPER IS TOMMOROW'S WASTE PAPER -ன்னு சொல்லுவாங்க..ஆனா நீ ரொம்ப அட்வான்ஸ்டா இருக்கியே.." அப்படின்னு ஒரு பிட்டை போட்டான்..எரிமலை எப்போ வெடிக்கும்னு காத்துகிட்டிருந்த தீபாவுக்கு ஏமாற்றம்...
"எழும்புற நேரமா இது..டீ குடுச்சியா??"-ன்னு கேட்டதோட அம்மா விட்டுட்டாங்க.
"அம்மா ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆச்சுல்ல..அக்கா,பெரியம்மா,அக்கா பசங்க எல்லாம் பார்த்து நெரையா நாள் ஆச்சு...கோயில் கும்பாபிஷேகம் வேர வருது" என்றவாறு டீ-யை சத்தமாக உறிஞ்சியபடியே எஞ்சிய பேப்பரை புரட்டினான் தினேஷ்..
"ஆமாடா..நல்லா வேல ஞாபகப்படுத்துன...ஊருக்கு போயே ஆகணும்... கேதம்....காது குத்துன்னு 1008 இருக்கு..சீக்கரம் உங்க அப்பாவை டிக்கெட் பூக் பண்ண சொல்லணும்"
"அடப்பாவி..இதே கேள்வியத்தான் நானும் கேட்டேன்..பையனை மட்டும் திட்டாத..நளைக்கு அவன்தனே உனக்கு சோறு போடப்போறான்" என்று முனுமுனுத்தபடி TV சத்ததைக் கூட்டினாள் தீபா
காய்கறி வாங்க மார்கெட் போயிருந்த அப்பா "ஏன்டா....வண்டிய எடுத்தா சொல்ல மாட்டியா...Reserve ல ஓட்டாதேன்னு எத்தனதடவை சொல்றது..ஆளுதான் 6 1/2 அடிக்கு வளர்ந்திருக்கே...சுய புத்தியே கிடையாது"என்றபடி உள்ளே நுழைந்தார்.
வந்ததும் மகளை பார்த்து "அம்லு..அப்பாவுக்கு ஜில்லுனு தண்ணி கொண்டுவாடா பார்க்கலாம்"என்றபோது..தினேஷனுக்கு தலையிலிருன்து கால் வரை பற்றி எரிந்தது..தீபா நமுட்டு சிரிப்பு சிரித்த்டபடி தினேஷைப் பார்த்தபடியே, ஃப்ரிட்ஜிலிருந்த ஐஸ் வாட்டாரை எடுத்தாள் அவள்..
உங்க வீட்ல எப்படி??

Comments