Skip to main content

டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பட்டனுக்குள் ஒரு பூதம்!



‘The service sector equivalent of Henry Ford’  என்று அழைக்கப்பட்டவர் Ray Kroc.  MCDonalds ஸ்தாபனத்தை பட்டி தொட்டியெல்லாம் பரப்பியவர்   அவர் அன்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார்.

“We are More serious about our hamburgers than anyone else” என்று அவர் முடிப்பதற்குள் அரங்கெங்கும் வெடித்துக் கிளம்பிய கரஒலி அடங்க வெகு நேரமாயிற்றுஅதன் பின் ஒரு சாதாரண விற்பனையாளனாக ஆக தன் வாழ்க்கையைத் தொடங்கிஎப்படி மெக்டோனால்ட் சகோதரர்களிடம் வேலைக்குச் சேர்ந்தவர்படிப்படியாக முன்னேறி மெக்டோனால்ட் கிளைகளைப் பரப்புவதற்கு அவருக்கு உதவும் அளவிற்கு உயர்ந்தார்.  மெக்டோனால்டின் உண்மையான முதலாளிகளே நினைத்துப் பார்த்திராத  வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துத் தந்த அவர்ஒரு கட்டத்தில் தானே அந்த நிறுவனத்தை சொந்தமாக்கினாலொழிய உலகத்தரத்திற்கு அந்த நிறுவனத்தை எடுத்துச்செல்ல முடியும் என்ற  தீர்மானத்திற்கு வந்து அதை எப்படி செயல்படுத்தினார் என்பதைப் பற்றி விளக்கியபொழுது அரங்கில் அப்படி ஒரு அமைதி.  தன் வருங்காலத்திற்கான முக்கியமான வாழ்க்கைப் பாடத்திற்கான குறிப்புகளையெடுத்தபடியும்கண் இமைக்கவும் மறந்து வேட்கையுடன் அவரது சொற்பொழிவின் சாராம்சத்தை உள்வாங்கியபடி உலகின் முதன்மையான தொழிற்கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழத்தின் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
பட்டமளிப்பு விழா முடிந்து பலரும் Ray Kroc உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.  தான் ஒரு ஹார்வார்ட் பட்டதாரி என்ற பெருமிதம் அவர்கள் ஒவ்வொருவரின் பேச்சிலும்பார்வையிலும்நடையிலும் அப்பட்டமாகத் தெரிவதை ரே உணர்ந்தார்.விருந்து பரிமாறப்பட்டது.  ரே மாணவர்களுடன் தானும் மாணவனாக ஜோதியில் ஐக்கியம் ஆகியிருந்தபொழுது சில மாணவர்கள் தானாகவே முன்வந்து அவர்மேல் தங்களுக்கிருக்கும் அபிமானம் பற்றி அவரிடம் பெருமிதத்துடன்  பகிர்ந்துகொண்டனர்அந்த வேளையில் எவரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் கூட்டத்தை நோக்கி எழுந்தது ரேயின் குரல்.
என் அருமை நண்பர்களேஇந்த அறையில் இருக்கும் நீங்கள் அனைவருமே அநேகமாக என்னைவிட மெத்தப்படித்தவர்கள்.  உங்கள் மேதாவித்தனத்திற்கு இப்போது ஒரு சவால்.  என் கேள்விக்கு யார் சரியான பதிலை அளிக்கிறீர்களோ அவருக்கு இங்கேஇப்பொழுதே என் நிறுவனத்தில் வேலை கொடுக்க நான் தயார் என்று அறிவித்தார்.  குதூகலமுற்ற மாணவர்கள் அந்தக் கேளிக்கை விளையாட்டிற்கு ஆர்வத்துடன் தயாரானார்கள்.மெக்டோனால்ட் நிறுவனத்தின் வெற்றி இரகசியம்  என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”இதைக் கேட்டதும் எல்லோரும் குபீரென்று சிரித்தனர்.  ஆனானப்பட்ட ரே கூடக் கையில் மதுக் கிண்ணத்தை ஏந்தியதும் பிதற்ற ஆரம்பித்துவிட்டார் பாவம்இல்லையென்றால் நம்மைப் பார்த்து இவ்வளவு சாதாரணமானதொரு கேள்வியை கேட்டிருப்பாரா என்று ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டனரே தவிர யாரும் அவருடைய கேள்விக்கு பதிலளிக்க முன்வரவில்லை.
ரே மீண்டும் ஒரு முறை இன்னும் அழுத்தமாக அதே கேள்வியைக் கேட்டார்.இப்போது கூட்டத்தில் இருந்த ஒரு முந்திரிக்கொட்டைக்கு மூக்கு வியர்த்தது. “தங்களுடைய சேவை மனப்பான்மையும்அந்தப் பர்கரின் சுவையும் தான் அந்த வெற்றிக்குக் காரணம் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது” என்றதோடு தன் கருத்தை யாரெல்லாம் ஆமோதிக்கிறார்களோ அவர்களையெல்லாம் கையை தூக்கச் சொன்னார்.
அதற்கு கூட்டத்தில் ஒருத்தன் “இது பள்ளி செல்லும் சிறுவனுக்குக்கூடத் தெரியுமேஇவ்வளவு சுலபமான பதில் அளித்தால் வேலை கிடைத்துவிடும் என்று தெரிந்திருந்தால் இவ்வளவு கஷ்டப்பட்டு பட்டம் படித்திருக்க மாட்டோமே.” என்று சொன்னதும் அந்த இடத்தில் பெரும் சிரிப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.
ஆனால் ரே இதற்கெல்லாம் அசரவில்லை.
மேடையேறி ஏலம்விடும் டபாரியைப்போல் அதே கேள்வியை மூன்றாம் முறையாகவும் அட்சரம் பிசகாமல் கேட்டதும் பலரும் எரிச்சலுற்றனர்.  வரிந்துகட்டிக்கொண்டு தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் காலை அவர் ஆற்றிய சொற்பொழிவின்போது எடுத்த குறிப்புகளையெல்லாம் தங்கள் பைகளிலிருந்து உருவி எடுத்தனர்.  அதிலிருந்த புள்ளி விவரங்களை பரீட்சைக்குப் பதிலளிக்கும் அதே சிரத்தையுடன் ஒப்புவித்தனர்.  அவரது சாதனைப்பட்டியல் அவரிடமே ஒப்புவிக்கப்பட்டது.
இதனால் பொறுமையிழந்த ரே பெருமூச்சு விட்டபடி, “ஆல்ரைட் பதிலை நானே சொல்லிவிடுகிறேன்” என்று சொல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கரில் எலிமினேட் ஆனவர்கள் போல முகத்தை வைத்துக் கொண்டார்கள் மாணவர்கள்.பட்டப்படிப்பு  உங்களைச் சொன்னதைச்சொல்லும் கிளிப்பிள்ளைகளாகவே தயார் செய்துள்ளது.   பட்டனுபவம் தான் உங்களை ஒரு விஷயத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாத விஷயங்களைப் பற்றியும் ஊடுருவிப்பார்க்கச் செய்யும் என்று நான் நம்புகிறேன் என்று பெரிய பீடிகையுடன் ஆரம்பித்தார் அவர்.
மனதளவில் அனைவரும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று நிச்சயப்படுத்திக் கொண்ட ரே தொடர்ந்தார்.நீங்கள் சற்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் மெக்டோனால்டின் ஒவ்வொரு கிளையும் ஒரு முச்சந்திக்கூடலிலோமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்திலோ தான் அமைக்கப்பட்டு இருப்பது உங்களுக்குத் தெரியும்.  ஆக மற்றவர்களை விட நாங்கள் அதிக பர்கர் விற்க சேவையையும்சுவையையும் விட முக்கியமான பங்கு ஒவ்வொரு கிளை தொடங்குவதற்கு முன்னும் எங்களுக்குள்ள ரியல் எஸ்டேட் அனுபவத்தைக் கொண்டு அதற்கான இடத்தைத் தீர்மானிப்பதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்திருப்பீர்கள்” என்று தங்கள் வெற்றியின் இரகசியத்தைப் போட்டுடைத்தார்.
அது உண்மைதான்.  அமெரிக்காவில் ஒருவர் எங்கு வசிக்கிறார் என்பதை அன்றைய தேதியில் அதன் அருகாமையில் உள்ள மெக்டோனால்ட் கிளையிலிருந்து நூல் பிடித்தாற்போல் தொடர்ந்து சென்று கண்டுபிடித்து கூறிவிட முடியும்.  இதைக்கேட்ட கூட்டத்தில் இருந்த பலரும் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தனர்.  சிலரது முகம் வெளிறிப் போயிருந்தது.
இந்தச் சம்பவம் நடந்தது 1980 களில் என்றாலும்இதில் அடர்ந்த பொருள் உள்ளடங்கியிருக்கிறது.1980-1990 காலகட்டம் உலகளவில் ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டிருந்தவர்களின் பொற்காலம் என்றால் மிகையல்ல.  அன்றைய தேதியில் சென்னை – மத்ய கைலாசம் தாண்டினால் மயானம் தான்.  தி.நகர் போன்ற ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு யாரும் தனியாகச் சென்று வர யோசிப்பார்கள்.
நம்ப முடிகிறதா?இன்று வேலை நிமித்தமாகப் பலரும் தினமும் மயிலாப்பூரிலிருந்து மகிந்திராசிட்டிவரை சென்று வருகிறார்கள்.  தி.நகருக்குப் போய் ஜவுளி வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதென்பது எண்ணெய் சட்டிக்குள் முங்கி எழுவதற்குச் சமம்மத்ய கைலாசம் டைடல் பார்க் தொடங்கி.சி.ஆர்.எம்.ஆர் வரை உள்ள எம்என்சிக்கள்கல்லூரிகள்டவுன்ஷிப்புகள் கணக்கிலடங்கா.  ஏக்கர் கணக்கில் கேளம்பாக்கத்தில் இடம் வாங்கிப்போட்டிருந்த இஸ்த்திரி கடைக்காரர் இன்று கோட்டீஸ்வரர்.
இன்று ரியல் எஸ்டேட் தன் உச்சத்தைத் தொட்டுவிட்டது.  இன்று வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்படும் எல்லோருமே ரங்கநாதன் தெருவில் ஒரு கிளைஎக்ஸ்ப்ரெஸ் அவன்யூவில் ஒரு கிளை என்று சகட்டு மேனிக்குத் தொடங்குவது சாத்தியமில்லை.  அப்படியென்றால்தாங்கள் ஈடுபட நினைக்கும் பெயர்பெற்ற ஸ்தாபனங்களுடன் அவர்களுக்குச் சமமாகப் போட்டிபோட கடைவிரிக்க ஒரு களம் அமைக்கவே முடியாதாஇதற்கு என்னதான் தீர்வு?
அண்ணாசாலையில் கடை தொடங்க வேண்டும் என்பது எல்லோருக்குமிருக்கும் அடிமனது ஆசை.  ஆனால் அவர்களிடம் இருப்பதோ மூலக்கடையில் 10க்கு 10 அளவில் ஒரு இடம் மட்டும்.
என் கைப்பக்குவத்தின் மேல் எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது.  என் வாழ்க்கை வரலாறும் பிற்காலத்தில் கெண்டகி சிக்கன் செய்ய ஆரம்பித்துவெற்றி பெற்ற மேஜர் …… வரலாற்றைப்போல் இடம் பெறத்தான் போகிறது பாருங்கள்.  ஒரு முறை நான் சமைத்த சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டுவிட்டால் கட்டாயம் அதற்குப் பிறகு என் வாடிக்கையாளர் ஆகிவிடுவீர்கள்.  டோர் டெலிவரி செய்யக்கூட நான் தயார்.  ஆனால் என்னால் ஸ்நேகாவை வைத்து விளம்பர படம் எடுக்கவோஅண்ணாசாலையின் உச்சந்தலையில் கட் அவுட் பலகையோ வைக்க முடியாது என்று ஆதங்கப்படுபவரா நீங்கள்கவலைப்படாதீர்கள்.  நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் உங்கள் கடையின் பெயரில் ஒரு வலைப்பூவையோ அல்லது ஒரு வலைதளத்தையோ (ப்ளாக் அல்லது வெப்சைட்தொடங்க வேண்டியதுதான்உங்கள் மாயாபஜார் (Virtual Office). கீழ்கண்ட 5 படிகளைத் தாண்டினால் வசப்படும்.

1.   Domain Registration: உங்கள் நிறுவனத்தின் பெயரில் ஒரு ப்ளாக்கை  Blogspotடிலோ அல்லது  Wordpressசிலோ கட்டணமின்றி ரெடிமேடாக ஒரு fully furnished website  தொடங்க உங்களுக்குத் தேவை ஒரு -மெயில் .டி மட்டுமே.  ஆனால் அதில் சில வரம்புகள் உண்டு.  உங்கள் வெப்சைட்டின் பெயருக்குப் பின்னால் .com, .in, .net, .org  என்பதற்குப் பதிலாக blogspot.com  அல்லது wordpress.com  என்று முடியும் வகையில் பேரை அமைக்க வேண்டும்.  இதன் மூலம் blogspot  அல்லது wordpress க்கு உங்கள் வலைப்பூவை நீக்கவோவிற்கவோ முழு உரிமை உண்டு.  வாடகை வீட்டில் குடியிருப்பது மாதிரிதான் இது.  விருந்தினர் வந்தா குத்தம்ஆணி அடிட்சு படம் மாட்டினா குத்தம் என்பதுபோல் நிறைய visitors  வந்தாலோ அதிக டேட்டா போன்ற பின்னிணைப்புகள் உங்கள் மொடைன் பெயரில் சேரச்சேர வீட்டு சொந்தக்காரரின் கெடுபிடிகள் கெடுபிடிகள் அதிகமாகிவிடும்உங்களுக்கே உங்களுக்கான வலைதளத்தை பட்டாபோட்டு கிரயம் செய்ய ஒரு -மெயில் .டியும் கடன் அட்டையும் (விசா / மாஸ்டர் கார்டு / பேபால் கணக்கும்இருந்தால் இந்த வேலையை இருந்த இடத்திலிருந்து இடைத்தரகர் இல்லாமலேயே செய்துவிடலாம்.

2.   Hosting: பட்டா போட்டாகிவிட்டது.  அடுத்தது என்னபூமி பூஜை போட்டு விட வேண்டியது தானேஉங்கள் நினைப்பு சரிதான் பாஸ்.  கிட்டத்தட்ட அதுதான் ஹோஸ்டிங்.  உங்கள் கட்டிடத்தின் டிசைன் தயாரானதுமே இத்தனை அடுக்கு கட்டிடத்திற்கு இத்தனை அடி ஆழம் அடித்தளம் போட வேண்டும் என்று உங்கள் இஞ்சினியர் ஆலோசனை கூறுவதுபோல் உங்கள் வெப்டிசைனர் உங்கள் வலைதளத்திற்குத் தேவையான ஹோஸ்டிங் சர்வர் எவ்வளவு திறன் உள்ளதாக இருந்தால்உங்கள் தளம் எவ்வளவு டிராபிக் வந்தால் தாங்கும் என்று கூறிவிடுவார்.  இதையும் நீங்களே இடைத்தரகர் இல்லாமலேயே செய்துவிடலாம்.

3.Website Design: வாஸ்துப்படி கட்டிடம் கட்டுவதில் பெரிய நம்பிக்கை நமக்கு இல்லாவிட்டாலும் கூடஅதை ஓரளவு பின்பற்றினால் ஓர் அடிப்படை ஒழுங்கு வந்துவிடும் என்பதை மறுபதற்கில்லை.  அதேபோல் ஒரு வலைதளத்தில் இந்த இடங்களில் முகப்புஎங்கைளப்பற்றிவிலாசம்தொடர்புக்குஎங்களிடம் கிடைக்கும் சேவைகள்பொருட்கள் பற்றிய சாதனைகள்வசதிகள் போன்ற விவரங்கள் இடம்பெற வேண்டும் என்பதை பேஜ் நேவிகேஷன் பற்றிய ஒழுங்கு முறைகளை உங்கள் வடிவமைப்பாளர் செய்து தந்து விடுவார்.  என்ன செங்கல்டைல்ஸ்சிமெண்ட் இடம் பெற வேண்டும் என்பதை முருக்குக்கம்பி வாங்க வேண்டும்எங்கு ஜன்னல் வரவேண்டும்சிட்-அவுட் வைக்கலாமா போன்ற முடிவுகளை ஒவ்வொருத்தருடைய ரசனைவாங்கும் சக்திக்கு உட்பட்டுத் தீர்மானித்துக் கொள்ளலாம்.  அதேபோல் எந்த பிளாட்ஃபார்மில் உங்கள் வலைதளத்தை வடிவமைக்க வேண்டும், Social networking plugings (fb, twitter, linkedin) எங்கு வரவேண்டும்அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் கூடுதலாக ஒரு லைவ். chat அல்லது ஒரு blog  சேர்க்கலாமா போன்ற விஷயங்களில் உங்களுக்குத் தெளிவு தேவைஇதில் அத்தியாவசியத்திற்கும்ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரிய வேண்டும்.

4.SEO,SEM: ஒரு கட்டிடத்தில் குடியேறுவதற்கு முன் ஏதாவதொரு ஹோமம் செய்வது நம் வழக்கம்.  அதற்கு வீடு முழுதாக கட்டி முடியும் வரைக் காத்திருக்கத் தேவை இல்லை.  ஹோமம் செய்வது கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையின்மேல் ஏற்படும் நம்பிக்கையின்மையினால் செய்யப்படும் சடங்கு அல்ல.  அதற்குப் போதிய அறிவியல் ஆதாரங்கள் உள்ளன.  உற்றார்உறவினர் சூழ்ந்திருக்கும் அந்த வேளையில் நல்ல வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு உங்களது ஷேமத்திற்காக அந்த ஹோமம் செய்யப்படுகிறது என்பதில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் SEO (Search Engine Optimization)  என்பதும் அதேபோன்றது தான்.  உங்களது Target audience   (குலதெய்வம்யார் என்பதைப் பொருத்து SEO வேறுபடும்.


5.Payment Gateway:  கட்டணத்தைக் கட்டியாகிவிட்டது உங்கள் கட்டிடம் கடையாக வேண்டுமென்றால் அதற்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டிய Commercial Current connection இல்லையாஅதுதான் payment gateway  கடன் அட்டை அல்லது வங்கிக்கணக்கு வாயிலாக உங்கள் பொருள் அல்லது சேவைக்கான கட்டணத்தை பெரும் வசதி.

இந்த 5 படிநிலைகளையும் நீங்கள் கடந்து வந்தால் ஒரு தூண்டாவிளக்கு உங்கள் கைவசமாகும்.  அதை நீங்கள் துடைக்க வேண்டியதுதான் பாக்கி.  இப்போது இரவுபகல்தூக்கம்பசி பார்க்காமல் உங்களுக்காக அயராது உழைக்க ஒரு அடிமை பூதம் தயார்.


ஆலம்பனா நான் உங்கள் அடிமை உத்தரவிடுங்கள்.”
என்று பணிவாக கைகட்டிக்கொண்டு ஆஜனபாகுவாக நிற்கும் உங்கள் வலைத்தளம்.


இந்த 5 படிகளைக் கடப்பதில் நீங்கள்  என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  அந்தச் சவால்களைத் தாண்டி செல்வதில் வெற்றிபெற்று விட்டீர்கள் என்போம்.  அதற்குப் பிறகு அந்தப் பூதத்தை எப்படிச் சரியாக வேலை வாங்குவதுஇவற்றைப் பற்றியெல்லாம் பின்னர் பார்ப்போம்

Comments

Popular posts from this blog

The Unusual Suspect- part 11

Glad to take over the story from an Infyblogger, Aishwarya  in continuation of her  Chapter 10- Beginning of the end- The Voice &The Question. Priya Dewan, one of the most promising names in the international record companies circuit was killed mysteriously, when she was holidaying in Norway. She was actually there on a secret mission on studying the Viking music prophecies. A girl of Indian origin, born in Philippines and settled in Singapore got her first breakthrough in the music industry when she went to Boston for higher studies. She went as an intern to The UK and joined Warp Records. She played a major role in revolutionizing the music industry and taking Warp records to greater heights and they branched out in the U.S because of her. All the way through Priya noticed that the million dollar industry was dominated by Europe and Asia didn't have a proper footing. She found her calling, relocated to Singapore and played a pivotal role in educating record companie

Let's just hope that sanity prevails!

No matter what kind of a reader you are - disclaimers like Please don't read this or my intention is not to hurt others definitely has an effect on your psyche. The same way I started reading Kavi's post with a smile. @Kavi- I am sure your message is conveyed loud and clear, to whomsoever intended. I have always had very strong views on the vanity publishing avenues. But I chose not to write it out because knew that might end up hurting someone or kill the spirit of writing in them and it is too early to judge a market which is just evolving. I tried anonymously subscribing to these platforms as an aspiring writer to understand the dynamics....but Kavi! you seem to have seen it in and out....most of what you have written is news to me and am sure it pretty much sums up the vanity publishing industry. But the post seems to sum up everything. I thought a little insight on how the traditional publishing industry works will interest the audience. I’ll take the same cowshe

CBC- SIX WORD MEMOIR

I cordially invite my first time blog visitors with a firm handshake and hello. Thanks to CBC's 6 word memoir for bringing you here and I take this opportunity to thank profusely,my college buddy VJ Eshwar for roping me in . I find CBC as the most diverse ecosystem of bloggers with students,media people,Social activists,entrepreneurs etc.  hi5 to all those more than 2nd time visitors.Though am yet to take part in any of the CBC meets, I have made a few real good friends. Am happy to receive the baton from one such good friend that I have made through CBC- Lakshmi , a product of PSBB as I always remember her.She always amazes me with her diction and choice of words and she is one of the most spirited Cricket enthusiast I have ever come across.Thank you Lakshmi for doing the honors. Keep writing! My 6 word memoir : 6 has always been my favorite and lucky number for more reasons than one.So I was ready with my memoir even before the chart was prepared. Immaterial of su