Skip to main content

Posts

Showing posts from March, 2018

பயணிகள் கவனத்திற்கு

ஷெர்லாக் ஹோம்ஸ்! இந்தக் கற்பனை துப்பறிவாளரின் கதாப்பாத்திரம் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 70 வெவ்வேறு நடிகர்களால் அந்தந்த காலகட்டத்திற்கு மெருகூட்டப்பட்டு அதேப் பொலிவுடன் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டேயிருக்கும் கின்னஸ் சாதனை! சமீபத்தில் பிபிஸி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் இந்தப் புதிய பதிப்பில் வரும் ஷெர்லாக் செல்ஃபோன் உபயோகிக்கிறார். நவீன சாதனங்களைப் பயன்படுத்தித் துப்பறிகிறார். அதனால் அது புது ரசிகர்களை உண்டாக்கியிருக்கிறது. ஷெர்லாக் ஹோம்சை உருவாக்கியவர் ஆர்தர் கானன் டாயல்!  பெண் எழுத்தாளர்களில் அகாதா கிரிஸ்டி எழுதிய "கர்டைன்”நாவலின் கற்பனைக் கதாப்பாத்திரமான பொய்ரோட், கதைப்படி இறந்தபொழுது   வாசகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி எழுதிய கடிதங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன. தன் 50வது வயதிற்கு மேல் த்ரில்லர் கதைகள் எழுதத் தொடங்கிய சிட்னி ஷெல்டன் இன்றுவரை தன் புத்தகங்கள் மூலம்  இறவாப் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதேப் போன்று, தமிழ்ச் சூழலில்...தகவல் களஞ்சியங்களும், உலக நாடுகளுக்கு விசாவும் அரிதாகக் கிடைக்கும் காலக்கட்டத்தில் வெளிவந்த தமிழ்வாணனின் "சங்கர்லால் த...