சில விஷயங்களை நாம் கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் வாங்க முடியாது.இது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பதை நான் அன்று உணர்ந்தேன்.
அன்று மாலை 6 மணி இருக்கும். ஞாயிற்றுக் கிழமை, ஏதாவது புது பட DVD வாங்கலாம் என்று வாடிக்கையான கடைக்குச் சென்றேன்.பாஸி....புதுசா எதுவும் வரலே என்றான் கடை பையன்."செரி பழைய புதுசு இருக்கா" என்றேன் சத்தாய்ப்பாக .
"அதோ அங்கே இருக்கறதுதான்" என்றான் சலீம் சலிப்பாக.
"செரி,செரி நான் பாதுக்கறேன்" னு சொன்னபடி தூசி படிந்த அந்த ஷெல்பைத் துலாவினேன்.
அளாவுதினின் அர்புத விளக்கு போல் கையில் சிக்கியது "Hits of Ilayaraja"
அடடே....இவ்வளோவும் ஒன்னா கடைக்குதா....பரவா இல்லையே அப்டின்னு நினைச்சுக்குட்டு "இது எவ்ளோ பா" என்று கேட்க்க
"25 rupees ணா" என்றான் சலீம்.something wrong எப்போவும் friend,boss னு கூப்பட்றவன் ஏன் என்ன அண்ணான்னு கூப்புட்டான்?
அப்போதான் என் மரமண்டைக்கு புரிஞ்சுது
"அடப்பாவிகளா ஒரு இ ளையராஜா dvd வாங்குனதுக்காகவாடா 10 வயச கூட்டிட்டே..ரைட் விடு.டேக் தி 25." னு நினைச்சுக்குட்டு வீட்டுக்கு வந்தேன்.
வந்ததும் DVDய play பன்னேன்.
கடைத்தெருவுக்குப் போயிருந்த அம்மா "என்னடா இது புதுசா இருக்குன்னு" கேட்க்க
"இல்லம்மா இது பழய புதுசுனு அதே மொக்கைய பாரபட்சம் இல்லாம போட்டேன்"
"அது செரி...எல்லாம் இந்த லொல்லு சபா..கணா காணும் காலங்கள் effect
எப்பவும் hindi,english ல எல்லாம் பாஷை புரியாம லபோ திபோன்னு கூச்சலும் கொழப்பமுமா இருக்கும்...வெங்கல கடைல யனை புகுந்த மாதிரி...
அம்மா "அது venga boys மா"
இப்போ என்ன திடீருன்னு இளையராஜா...ஐய்யாவுக்கு loveகிவ்வு எதாச்சு.....
ஒரு terror look விட்டதும்..அம்மா அடுப்படிக்கு அபேஸ் அகிட்டாங்க.
அங்கிருந்தபடியே"உனக்கு ஞாபகம் இருக்காடா....எப்பொவாச்சும் நான் உன்ன கோவத்துல திட்டுனாலோ...லேஸா அடிச்சலோ...நீ...தாயடிச்சு வலிசச்சதில்ல.. இருந்தும் நான் அழுவேன்...நான் அழுதா தாங்கிடுமா உடனே தாய் அழுவா ன்னு சின்னத்தம்பி பாட்டு பாடி என்ன கவுத்திடுவே" என்று அம்மா சொல்ல
அதுவரை ஹால்ல அமைதியா பேப்பர் படிச்சுகி ட்டிருந்த அப்பா
"ஆமா...ஆமா... தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே…. பாட்டு பாடிக்கிட்டே என் மேலே அப்டியே சாஞ்சு தூங்கிடுவான்”
மனக்கட்டை..டேபிள் எது கெடச்சாலும் பச்சமல பூவு (kizhakku vaasal)பாட்டை யார் வந்தாலும் தாளம் போட்டு பாடிக்காட்டுவான்" என்றவர் கண்களில் நெகிழ்ச்சி
"அந்த வெகுளித்தனம், துறுதுறுப்பு எல்லாம் எங்க போச்சு. 80 கள்ள ஒருத்தர் வாழ்க்கையோட எந்த பருவத்துல இருந்திருந்தாலும் உறைந்துபோன அவரின் டைரி குறிப்பில், கல்யாண கேசெட்டில், காதுகுத்தில், கருமாதியில் இளையராஜாவின் இசை இன்றும் இழையோடிக்கொண்டிருக்கும் "என்று எனக்கு நானே பேசிக்கொண்டிருக்க
ஹாலில் நிசப்தம்......என்னடான்னு எட்டிப்பார்த்தா இளமை ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது
"அந்த படம் நம்ம கல்யாணம் ஆகி பார்த்த முதல் படம் ல" என்று அப்பா கூற BGMல "முதல் மரியாதை பாட்டு"
ஏதோ பூர்வீக சொத்தை மீட்டு வந்ததுபோல் தோன்றியது எனக்கு!!!
Comments